கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிப்பு..!

கோவை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி வருகிற 12-ம் தேதியிலிருந்து 19 -ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் எந்தெந்த இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்ற விவரத்தை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

வரும், 12 முதல் 19 வரை, கீழ் கண்ட அலுவலகங்களில் அந்தந்த தொகுதி வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யலாம், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொகுதிவாரியாக வேட்புமனு பெறப்படும் இடங்கள்:

மேட்டுப்பாளையம், சூலுார் - அங்குள்ள தாலுகா அலுவலகம்.

கவுண்டம்பாளையம் - மேட்டுப்பாளையம் ரோட்டில் அமைந்துள்ள வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்.

கோவை வடக்கு - வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையத்தில் அமைந்துள்ள தேர்தல் அதிகாரி அலுவலகம், தடாகம் ரோடு.

தொண்டாமுத்துார் - தெற்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்.

கோவை தெற்கு - மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகம்.

சிங்காநல்லுார் - மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகம்.

கிணத்துக்கடவு - மதுக்கரை தாலுகா அலுவலகம்.

பொள்ளாச்சி - சார் ஆட்சியர் அலுவலகம்.

வால்பாறை - ஆனைமலை தாலுகா அலுவலகம்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...