கோவை வழித்தடத்தில் இயங்கக்கூடிய ராமேஸ்வரம் ரயில் உட்பட 6 வாராந்திர ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

கோவை: கோவை வழித்தடத்தில் இயங்கக்கூடிய ராமேஸ்வரம் ரயில் உட்பட 6 வாராந்திர ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை வழித்தடத்தில் இயங்கக்கூடிய ராமேஸ்வரம் ரயில் உட்பட 6 வாராந்திர ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தென்னக ரயில்வே கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பரவல் காரணமாக பயணிகள் குறைவாக வருவதால் கோவை ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில், ராமேஸ்வரம் கோவை வாராந்திர சிறப்பு ரயில் மே 15 மற்றும் 26 ஆகிய நாட்களில் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல, கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் புதுச்சேரி - மங்களூர் வாராந்திர சிறப்பு ரயில், மங்களூரு - புதுச்சேரி வாராந்திர சிறப்பு ரயில் மே 20 முதல் 28 ஆம் தேதி வரையும், கொச்சுவேலி இந்தூர் வாராந்திர சிறப்பு ரயில், இந்தூர் வாராந்திர சிறப்பு ரயில் மே 22ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரையும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...