கர்நாடகா டூ கேரளா சிறப்பு ரயில்... கேரளாவிற்கு கோவை வழியாக யஷ்வந்த்பூர் - கொச்சுவேலி சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவிப்பு!

கோவை: கா்நாடகம் மாநிலம், யஷ்வந்த்பூரில் இருந்து கேரள மாநிலம், கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: கா்நாடகம் மாநிலம், யஷ்வந்த்பூரில் இருந்து கேரள மாநிலம், கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இன்று முதல் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் யஷ்வந்த்பூரில் இருந்து இரவு 8.45 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்-07395) மறுநாள் பிற்பகல் 1.10 மணிக்கு கொச்சுவேலியை சென்றடையும்.

இதேபோல, நாளை முதல் புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, திங்கள்கிழமைகளில் கொச்சுவேலியில் இருந்து மாலை 5 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண் – 07396) மறுநாள் காலை 9.30 மணிக்கு யஷ்வந்த்பூரை சென்றடையும்.

இந்த ரயிலானது, பானஸ்வாடி, தருமபுரி, சேலம், ஈரோடு, கோவை, பாலக்காடு, திருச்சூா், ஆலுவா, எா்ணாகுளம் டவுன், கோட்டயம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...