கோவை கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி வகுப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.!!

கோவை: கோவை கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



கோவை: கோவை கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோவை மாவட்டத்தில் உள்ள ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2021-22 ம் ஆண்டுக்கான முழு நேர மேலாண்மை கூட்டுறவு பட்டய பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

இதற்கான சேர்க்கை விண்ணப்பம் இணையத்தளம் (www.tncu.tn.gov.in) மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

இதில் சேர்வதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 12-ம் வகுப்பு ஆகும். அதிகபட்ச கல்வித்தகுதியாகப் பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பயிற்சி காலம் 36 வாரங்கள் ஆகும். இப்பயிற்சியில் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி, கணினி பயிற்சி, நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் பயிற்சி, ஆகிய பயிற்சிகள் கற்றுத்தரப்படும். அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்படும்.

இப்பயிற்சிக்கான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து முதல்வர், ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையம், 57, டாக்டர் அழகேசன் சாலை, சாய்பாபா காலனி(அஞ்சல்), கோவை- 641 011 என்ற முகவரிக்குப் பதிவு தபால் அல்லது கூரியர் மூலம் சமர்ப்பிக்கவும்.

விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் அடுத்த மாதம் 15ம் தேதி மாலை 5.30 மணிக்குள். மேலும் விவரங்களுக்கு 0422-2442186, 9442810203 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் முதல்வர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...