தொழிற்சாலை உரிமங்களை ஆன்லைனில் மட்டுமே புதுப்பிக்க வேண்டும்..! அக்டோபர் 31ம் தேதி கடைசி நாள்..!!

இதன்படி https//dish.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று உரிமையை ஆன்லைன் மூலம் செலுத்தி இணைய வழியாக விண்ணப்பத்தை சமர்ப்பித்து புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



கோவை: கோவையில் தொழிற்சாலை உரிமங்களை புதுப்பிக்க நேரில் வர வேண்டாம் எனவும் ஆன்லைனில் மட்டுமே புதுப்பிக்க வேண்டும் என்று இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோவை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தொழிற்சாலைகளும் 2022-ம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைன் மூலமே மட்டும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்கு வருகிற 31-ஆம் தேதி கடைசி நாளாகும்.

இதன்படி https//dish.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று உரிமையை ஆன்லைன் மூலம் செலுத்தி இணைய வழியாக விண்ணப்பத்தை சமர்ப்பித்து புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...