கோவையில் தேசிய தொழில் பழகுநர் ஊக்குவிப்பு திட்டத்தின் சேர்க்கை முகாம்

தேசிய தொழில் பழகுநர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் மாவட்ட அளவிலான பிரதம மந்திரியின் சேர்க்கை முகாம் ஜூன் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது.


கோவை: தேசிய தொழில் பழகுநர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் மாவட்ட அளவிலான பிரதம மந்திரியின் சேர்க்கை முகாம் ஜூன் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; ஜூன் 13ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் மத்திய ல, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களும் மற்றும் கோவையில் உள்ள தனியார் துறை நிறுவனங்களும் பங்கேற்று 500க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளனர்.

இதில் தேர்வு பெறுபவர்களுக்கு, தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கப்பட்டு மத்திய அரசின் தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் அந்த சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் வயது வரம்பில், மேலும் ஓராண்டு சலுகையும் உள்ளது. மேலும், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில் பழகுநர் பயிற்சியின்போது உதவித்தொகை தொழில் பிரிவுகளுக்கு ஏற்ப தொழில் நிறுவனங்களால் வழங்கப்படும் எனவும் அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் என்சிவிடி யின் கீழ், தொழிற் பயிற்சி பெற்றவர்கள் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் முடித்த தகுதி வாய்ந்தவர்கள் உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, 9486447178, 9442651468, 9840343091 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்à®...