கோவையில் மாணவர்களின் தடையை மீறி ரேக்ளா போட்டி துவக்கி வைத்த அமைச்சரின் கார் முற்றுகை

ஜல்லிக்கட்டிற்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று கோவையில் ரேக்ளா போட்டிக்கு மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக கொடிசியா மைதானத்தில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

இதற்கிடையே, தற்போது உள்ள அவசரச்சட்டம் வேண்டாம் எனவும் ஜல்லிக்கட்டு மீதான தடைகள் நிரந்தரமாக நீங்க வேண்டும் எனவும் இந்த போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், கொடிசியா வளாகத்தில் இன்று ரேக்ளா போட்டி துவங்கியது. இதனை அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்து, செய்தியாளர்களைச் சந்தித்த போது, இப்போராட்டத்திற்கு அவசரச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது அதிமுக-விற்கு கிடைத்த வெற்றி என உரையாற்றினார்.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜல்லிக்கட்டு மீதான தடைகள் அனைத்தும் நீங்கும் வரை ரேக்ளா, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகள் நடைபெறக் கூடாது எனவும் கூறிய இளைஞர்கள் தொடர்ந்து, அமைச்சரின் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனைத்தொடர்ந்து, கொடிசியா வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், இளைஞர்களுடன் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.





Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...