திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே உள்ள காவுத்தம்பாளையம் கிராமத்தில் துணை மின் நிலையம் அமைப்பதை ரத்து செய்ய வேண்டும் என்றும், உயர் மின் கோபுரம் திட்டத்தை சாலை ஓரம் செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவுத்தம்பாளையம் கிராமம், குமரிக்கல்பாளையத்தில் 3,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி முழுவதும் விவசாயம் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் விருதுநகர் முதல் திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையம் வரை 765 கிலோவாட் உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை சாலை ஓரமாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.



காவுத்தம்பாளையம் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகம் செய்து வருவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழர்களின் வரலாறு, பண்பாடு அழிவதற்கு மாவட்ட நிர்வாகம் துணை போகிறது. விவசாயிகளின் எதிர்ப்பை மீறி துணை மின் நிலையத்தையும் அமைக்க விடமாட்டோம், உயர்மின் கோபுரத்தையும் அமைக்க விட மாட்டோம். அதற்காக சிறை செல்லவும் தயார்," என்று தெரிவித்தனர்.

மேலும், "இந்தப் பகுதிகள் முழுவதும் அகழாய்வு ஆராய்ச்சி மேற்கொண்டால் பல வரலாற்றுச் செய்திகள் குறியீடுகளை மீட்டெடுக்க முடியும்," என்றும் அவர்கள் கூறினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...