கோவையில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் - 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்!


ஜல்லிக்கட்டு விளையாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையினை நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாக ஒன்றிணைந்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே, ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு அரசுத் தரப்பில் அவசரச் சட்டம் இயற்றப்பட்டும், நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கூறி போராட்டத்தினை தொடர்ந்து நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இன்று போராட்டத்தை கைவிடுமாறு கூறிவந்த காவல்துறையினர் திடீரென போராட்டக்காரர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். 

சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரின் மீதும் தாக்குதல் நடத்தியதில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

கோவை, வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்களத்தின் அருகே குவிக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டோரை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், மாணவர்களோ அரசுத் தரப்பில் அவசரச் சட்டம் இயற்றப்பட்டும், மத்திய அரசாங்கம் ஜல்லிக்கட்டின் மீது இருக்கும் தடை முற்றிலுமாக நீக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை தொடர்ந்து முன் வைத்தனர். 

இதையடுத்து, போலீசார் மாணவர்களை குண்டுக்கட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதனால் போராட்ட களத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, போலீசார் தடியடி மேற்கொண்டனர். பின்பு, சற்று நேரத்தில் போராட்டக்காரர்கள் வ.உ.சி. மைதானத்தில் இருந்து முற்றிலுமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.



Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...