ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமம் மற்றும் நியூயார்க்கின் கண்காடியா கல்விக் குழுமம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் துவக்கம்


கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமத்தைச் சார்ந்த ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் செயல்பட்டு வரும் கண்காடியா கல்லூரியிடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது.



ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி மற்றும் கண்காடியா கல்லூரியின் நிர்வாகத் துணைத் தலைவர் முனைவர் ஜேம்ஸ் கிரிஸ்டியன் பர்க்கி ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதன் மூலம் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை பயிலும் மாணவர்கள் முதல் இரண்டு வருடங்களை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று மீதமுள்ள ஒரு வருடத்தினை அமெரிக்காவில் உள்ள கண்காடியா கல்லூரியில் கல்வி உதவித் தொகை பெற்று பயில்வார்கள்.

முழுமையான வருடங்களை முடித்த பின்னர் இம்மாணவர்கள் மேலும் ஒரு வருடம் அமெரிக்காவில் இதே கல்லூரியில் முதுகலை மேலாண்மை பட்டத்தினை பெறலாம். மேலும், இத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு புதுமையான முறையில் கல்விகள் வழங்கப்பட உள்ளது.



இந்நிகழ்ச்சியில், இக்கல்விக் குழுமங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் கி.சுந்தரராமன், கல்லூரி முதல்வர் பாபாஞானகுமார், துறைத் தலைவர்கள் சுமதி, அன்புமலர், சந்தானலட்சுமி, விஜிமோல், பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...