பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்ட முயற்சி : இரு மாநில எல்லைகளுக்கு சீல்!


பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுமான பணிகளை மேற்கொள்வதால் பல்வேறு கட்சியினர் கேரள எல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் தமிழக-கேரள எல்லை பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.



பவானி ஆற்றின் குறுக்கேதேக்குவட்டை, மஞ்சக்கண்டிஉள்ளிட்ட 6 இடங்களில் கேரளஅரசு தடுப்பணைகள் கட்டும்பணியில் ஈடுபட்டுள்ளது. தமிழகஅரசின் ஒப்பதல் இன்றி, கட்டுமானபணிகள் நடைபெறுவதை தடுத்தநிறுத்த வலியுறுத்தி தொடர்போராட்டங்கள் நடந்துவருகின்றன. இதன் ஒரு பகுதியாகபவானி ஆற்றில் தடுப்பணைகள்கட்டும் கேரள அரசை கண்டித்தும்,கட்டுமான பணிகளை மத்திய அரசுதடுத்து நிறுத்த வலியுறுத்தியும், தமிழக கேரள எல்லைப்பகுதியான கோவை மாவட்டம் ஆணைக்கட்டியில்அனைத்து கட்சிகள் சார்பாக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் திமுக, தபெதிக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், விவசாய சங்கங்கள், வணிகர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். 



இதையடுத்து பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பகுதிகளுக்கு சென்று, கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த அனைத்து கட்சியினர் சென்றனர். கேரள மாநிலத்திற்குள் நுழைய முயன்றவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் எனவும், இதனை தடுத்து நிறுத்த தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அரசு தடுப்பணைகள் கட்டுமான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டால், அம்மாநில எல்லைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.



இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 450 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டக்காரர்கள் கேரள மாநிலத்திற்குள் நுழைவதை தடுக்க நான்கு அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநில எல்லைகளில் தண்ணீர் பீரங்கி வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.  இதனால் கேரள மாநிலத்திற்கு செல்பவர்கள் மாற்று வழியில் சென்றனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...