சில்லரை மற்றும் மளிகை கடைகளில் விற்கப்படும் தரமற்ற உணவுப் பொருட்கள் குறித்து நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், தடாகம் சாலையில் செயல்பட்டு வரும் சில்லரை மற்றும் மளிகைக் கடைகளில் விற்கப்படும் தரமற்ற உணவுப் பொருட்களை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்வது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கக்கோரி தலித் சேனா அமைப்பின் கோவை மாவட்ட தலைவர், வழக்கறிஞர் பிரிவு வீ.புஷ்பானந்தம் மனு அளித்துள்ளார்.



இதுகுறித்து அவர் அளித்துள்ள அனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டம், தடாகம் சாலையில் கோவில் மேடு பேருந்து நிலையிம் அருகில் வழக்கறிஞர் அலுவலகம் வைத்து செயல்படுத்தி வருகிறேன். 

இந்நிலையில், தடாகம் சாலையில் உள்ள வெங்கிட்டாபுரம், வேலாண்டிபாளையம், கோவில் மேடு, சிவாஜிகாலனி, இடையர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் மளிகை கடைகளில் மற்றும் பெட்டிக் கடைகளில் தரமற்ற உணவு பொருட்களை மற்றும் திண்பண்டங்களை பாக்கெட் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

மேலும், இந்த பாக்கெட்டுகளில் எடை அளவு, தயார் செய்த தேதி மற்றும் காலாவதி தேதி உள்ளிட்டவை இருப்பதில்லை. இதனை அறியாமல் வாங்கி உண்ணும் போது வாந்தி உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகிறது.

எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மேற்கண்ட தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். இதனை தயார் செய்பவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...