ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தாக்குதலில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீதும், காவல் துறையினர் மீதும் நடவடிக்கை கோரி காவல் ஆணையரிடம் மனு


தமிழகத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தின் போது இறுதிநாட்களில் வன்முறையில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீதும், மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய காவல் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் தமிழ்மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் மனு அளிக்கப்பட்டது.



இதுகுறித்து தமிழ்மாநில காங்கிரஸ் இளைஞர் அணியின் மாநிலத் தலைவர் எம்.யுவராஜா அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையினை நீக்கக் கோரியும், பீட்டா அமைப்பினை தடை செய்யக் கோரியும் தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர்களால் அறவழிப் போராட்டம் நடைபெற்றது.

இதில் கோவை மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டம் ஒரு வார காலமாக அமைதியான முறையில் நடைபெற்று வந்த நிலையில், திடீரென சட்ட விரோத கும்பல் ஊடுருவிட்டதாகக் கூறி கோவை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவின்பேரில் காவல்துறையினர் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி அனைவரையும் கலைந்துபோக செய்தனர்.

எனவே, கோவை மாநகர காவல் துறை ஆணையர் கூறிய சட்ட விரோத கும்பலை அடையாளம் கண்டு அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்ககோரியும், வன்முறை தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு வேளை காவல்துறை தவறு செய்தவர்களை கண்டிக்கத் தவறினால் பாதிக்கப்பட்டவர்களோடு மனித உரிமை ஆணையத்தை நாடுவோம். இதுகுறித்து சென்னை காவல்துறை இயக்குநர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளேன்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...