குழந்தைப் பருவத்தை மேம்படுத்தும் குறிக்கோளுடன் என்பேன்ஸ் குழந்தைகள் மையம் துவக்கம்


ஐந்தில் ஒரு குழந்தை பேச்சுக்குறைபாடு, கற்றல் குறைபாடு, மொழி குறைபாடு அல்லது பழக்கவழக்கங்களில் மாறுபாட்டுடன் வளர்கிறது. இக்குறைபாடுகளை கண்டறிந்தால் எழிதாக குணப்படுத்தி விடலாம் என உலவியல் நிபுனர் மருத்துவர் புனிதா ஜோ தேஜா தெரிவித்துள்ளார்.

ஒரு 6 மாதக்குழந்தை தன்னுடைய தாயை கண்ணுடன் கண் பார்க்கவில்லை என்றாலோ, ஒரு வயதுக் குழந்தை ஒரு வார்த்தை கூட பேச இயலாமல் போனாலோ அல்லது ஒரு 2 வயதுக்குழந்தை 2 வார்த்தை கூட பேச இயலாமல் போனாலோ அது கவலைக்குறிய விசயமாகும். மருத்துவர் ஜோசப் சன்னி, இவை அனைத்தும் சிகிச்சை மற்றும் தகுந்த ஆலோசனைகள் மூலம் சரிசெய்யக்கூடும் என கூறுகிறார்.

இது போன்ற குறைபாடுகளை கண்டறிந்து அந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக என்பேன்ஸ் குழந்தைகள் வளர்ச்சி மையம் இன்று கோவை சாய்பாபா காலனியில் துவங்கப்பட்டது. இதை கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் கணபதி மற்றும் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் எட்வின் ஜோ ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர்.



எப்பேன்ஸ் என்பது ஒரு பன்முக குழந்தை வளர்ச்சி மையமாகும். இங்கு தாமதமாக பேசுதல், ஆட்டிசம் குறைபாடு, கவணமின்மை மற்றும் அதிகப்படியான விளையாட்டுத் தன்மை, உணர்தலில் உள்ள குறைபாடு, பழக்கவழக்கத்தில் மாறுபாடு, கற்றல் குறைபாடு உள்ளிட்ட வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு மருத்துவம், தெராபெட்டிக் மற்றும் கல்வி உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளது என ஜோசப் சன்னி கூறினார்.



இதைத்தொடர்ந்து பேச்சுப் பயிற்சியாளர் சரண்யா சண்முகராஜா கூறுகையில், ஆக்குபேசனல் தெரபி, பிகேவியரல் தெரபி, சென்சரி இன்டர்கிரேஷனல் தெரபி, மனநிலை சிகிச்சை, பேச்சுப் பயிற்சி, சிறப்புக் கல்வி, பிசியோதெரபி மற்றும் நரம்பு மன்டல வளர்ச்சி சிகிச்சை ஆகயவற்றின் மூலம் ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு நாங்கள் பயிற்சியளிக்கிறோம்" என்றார்.



இந்த குறைபாடுகளுக்கு முக்கியக் காரணம் குழந்தைகளின் சோம்பேரித் தனமான வாழ்க்கை முறையே ஆகும். இக்காலத்தில் குழந்தைகள் அவர்களுடைய போன், டேப்லட் உள்ளிட்ட மின்னனு பொழுதுபோக்கு சாதனங்களை பயன்படுத்துவதிலேயே நேரத்தை செலவிடுகின்றனர். அவர்கள் வெளியில் சென்று விளையாடுவது இல்லை. 

இதுகுறித்து ஜோஷப் அவர்கள் பெற்றோர்களுக்கு வழங்கிய அறிவுரை என்னவென்றால், பெற்றோர்கள், குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதை உறுதி செய்ய வேண்டும். இது போன்ற மின்னனு கருவிகளை குழந்தைகள் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். மேலும், குழந்தைகளை ஒரு நேரத்தில் ஒரு செயல் செய்வதினை பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். 

அவர் இதுகுறித்து எடுத்துக்காட்டாக கூறும்போது, பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகள் டிவிக்கு முன் அமர்ந்திருக்கும் போது உணவருந்த அனுமதிக்கின்றனர். இது குழந்தையின் கவணத்தை திசைதிருப்புகிறது. குழந்தை சாப்பிட வேண்டும், அல்லது தொலைக்காட்சியினை காண வேண்டும். சிறுவனோ, சிறுமியோ 6 வயதில் இருந்து தங்களது வேலைகளை தாங்களே செய்துகொள்ள முடிய வேண்டும். பெற்றோர்கள், தங்களுடைய குழந்தைகளிடம் ஏதேனும் மாறுபட்ட செயல்களைக் காணும்பொழுது உடனடியாக நிபுனர்களின் உதவியை நாடவேண்டும்.

சரண்யா அவர்கள் என்பேன்சில் முழுநேர ஆலோசகராக உள்ளார். ஜோஷப் அவர்கள் பகுதிநேர ஆலோசகராக உள்ளார். இதில் முன்பதிவு செய்ய 98653-53153 அல்லது 90251-90005 ஆகிய தொலைபேசி எண்களுக்கு அழைக்கலாம்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...