பொங்கல் பரிசு தொகுப்புடன் மண்பாண்டங்களை வழங்க கோரிக்கை - கோவை மாவட்ட ஆட்சியரிடம் மண்பாண்ட தொழிலாளர்கள் மனு

தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்புகளுடன் மண்பானை, மண் அடுப்பு போன்றவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி மண்பாண்ட தொழிலாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை: தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தினர் தலையில் மண் அடுப்பு, மற்றும் பானைகளை சுமந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.



இதனையடுத்து, மண்பாண்ட தொழிலாளர்கள் நலனுக்காக புது பானையில் பொங்கல் இட களிமண்ணால் ஆன ஒரு அடுப்பும் புதுப்பானையையும் அரசு பொங்கல் பரிசாக வழங்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பானை, அடுப்புடன் மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மண்பாண்டங்களை அரசு நேரடியாக கொள்முதல் செய்து இலவசமாக வழங்கினால், நலிவடைந்து வரும் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்கப்படும் என தெரிவித்த மண்பாண்ட தொழிலாளர்கள், மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தினர், ஒவ்வொரு பொங்கல் பண்டிகையின் போதும் தமிழக அரசால் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படுகிறது.

இதில் விவசாயிகள் நலனை பாதுகாக்கும் வகையில் அரிசி, பருப்பு, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை அரசால் கொள்முதல் செய்யப்பட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அதேபோல நெசவாளர்கள் நலனை கருத்தில் கொண்டு வேட்டி, சேலைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.



இதேபோல பாரம்பரியமாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, மண்பானை மற்றும் மண் அடுப்புகளை அரசு கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

தற்போது மண்பாண்ட தொழில் நலிந்து வரும் நிலையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியரும் பரிந்துரை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...