சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் - கோவையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மனு அளிக்கும் போராட்டம்

சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கோவையிலும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.



கோவை: சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தையொட்டி மாநிலம் முழுவதும் மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மனு அளித்தனர்.



இந்நிலையில் அவர்கள் அளித்த மனுவில், வீடற்றவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். பட்டா கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும். பேரூராட்சி, நகராட்சிகளில் 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.

100 நாள் பணிகள் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். புதிதாக வழங்கும் பட்டாக்களை பெண்கள் பெயரில் வழங்க வேண்டும் மற்றும் நீர்நிலைகள் போன்ற இடங்களில் வாழும் மக்களுக்கு, வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...