ஆம்னி பேருந்து அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை

விழாக்காலம், விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் 100, 8190000100, 0422 2303390 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.


கோவை: சமீபகாலமாக விழாக்கள், விடுமுறை நாள் என்றவுடன் யாருக்கு கொண்டாட்டமோ இல்லையோ ஆம்னி பேருந்து நிர்வாகத்தாருக்கு பெரும் கொண்டாட்டம் தான். ஏனென்றால், காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்று சொல்வது போல, விழாக்கள் மற்றும் விடுமுறை காலங்களில் சொந்த ஊருக்கு செல்ல அதிக அளவிலான பொதுமக்கள் பேருந்துகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

கூட்டம் அதிகமாக இருப்பதன் காரணமாக ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணத்தை வசூலித்து வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்கள் கொண்டாட்டத்துக்கு தயாரானாலும் அவர்கள் ஊருக்கு செல்லும் போது திண்டாட்டத்தில் மாட்டிக் கொள்கின்றனர். குறிப்பாக ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் அரங்கேற்றும் அட்டகாசங்கள் சொல்லி மாளாது.

அதுவும் விழாக்காலங்களிலும், விடுமுறை நாட்களிலும், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகரித்து வசூல் செய்யப்படுகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் முன்னதாக புகார் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் பேசியதாவது, அரசாங்கம் நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயித்து வசூலித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆன்லைனிலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ கூடுதலான கட்டணத்தை வசூல் செய்தால் உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.

பொதுமக்கள் 100, 8190000100, 0422 2303390 போன்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். மேலும், மாநகர காவல்துறையின் ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் புகார் தெரிவிக்கலாம்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...