கோவை காவலர் பள்ளி வளாகத்தில் பாரா சைலிங்கில் பறந்த டிஐஜி முத்துச்சாமி மற்றும் துணை ஆணையாளர் சிலம்பரசன்

காவலர் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற என்.சி.சி மாணவர்களுக்கான பாரா சைலிங் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட டிஐஜி முத்துச்சாமி மற்றும் துணை ஆணையர் சிலம்பரசன் ஆகியோர் பாரா சைலிங்கில் பறந்தனர்.



கோவை: கோவை காவலர் பள்ளி வளாகத்தில், தேசிய மாணவர் படை சார்பில் பள்ளி, கல்லூரி என்.சி.சி மாணவர்களுக்கான பாரா சைலிங் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் என்.சி.சி மாணவர்களுக்கு பாரா சைலிங் பயிற்சி வழங்கப்பட்டது.



இதற்காக தகுந்த பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், நேற்று பயிற்சிக்கான முன்னேற்பாடுகள் தயார் செய்த போது, கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பாரா சைலிங்கில் பறந்து அசத்தினார்.



இந்நிலையில் இன்று என்.சி.சி மாணவர்களுக்கான பயிற்சி துவங்கிய நிலையில் அங்கு வந்த கோவை சரக டி.ஐ.ஜி முத்துச்சாமி, மற்றும் கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் சிலம்பரசன் ஆகியோர் பாரா சைலிங்கில் பங்கேற்றனர்.



முன்னதாக அவர்களுக்கு பாரா சைலிங் குறித்தான விதிமுறை மற்றும் எவ்வாறு கீழே இறங்க வேண்டும் என்ற வழிமுறைகள் கூறப்பட்டது. இதையடுத்து இருவரும் பாரா சைலிங்கில் பறந்தனர். அதனை தொடர்ந்து என்.சி.சி மாணவர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...