கோவையில் இருந்து சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்களில் கட்டணம் பல மடங்கு உயர்வு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு மடங்கு அதிகமாகும் பயண சீட்டுகளின் விலை விமான சேவையும் விட்டு வைக்கவில்லை. சென்னை - கோவை இடையே வழக்கமாக ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படும் பயணசீட்டு ரூ.14 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யபடுகிறது.


கோவை: இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் அக்டோபர் 24-ம் தேதி கொண்டாப்படுகிறது. மக்கள் சிரமமின்றி தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல பல்வேறு சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இந்நிலையில் கோவையில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்களிலும் பயணசீட்டு முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு கோவையிலிருந்து இருமார்கத்திலும் இயக்கப்படும் விமானங்களில் பயண கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:

ஆண்டுதோறும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் அனைத்து விமானங்களிலும் பயணச்சீட்டு முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுவது வழக்கம். தேவைக்கேற்ப விமான நிறுவனங்களும் தற்போது இயக்கப்படும் வழித்தடங்களில் கூடுதல் விமான சேவை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளும்.

தற்போது கோவையில் தினமும் சென்னைக்கு 7 விமானங்கள், டெல்லிக்கு 4, மும்பைக்கு 3, ஐதராபாத் 3, பூனே 2, பெங்களூரு 2 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர ஷார்ஜா மற்றும் சிங்கப்பூருக்கு தலா ஒரு விமான சேவை வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தினர் கூறியதாவது:

கோவையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு விமான சேவை வழங்கப்படும் போதும் பண்டிகை நாட்களில் சென்னை, மும்பை மற்றும் டெல்லி நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் விமானங்களுக்கான பயணசீட்டு முன்பதிவு மிகவும் விறுவிறுப்பாக காணப்படும்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை - கோவை இடையே வழக்கமாக ரூ 4 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படும் பயணசீட்டு ரூ.14 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

குறிப்பாக அக்டோபர் 22-ம் தேதி பகலில் சென்னையில் இருந்து கோவைக்கு விமான கட்டணம் ரூ 13,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நாள் இரவு பயணத்திற்கு ரூ.12,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மும்பை- கோவை இடையே இயக்கப்படும் விமானத்தில் வழக்கமாக ரூ.5 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படும் பயணசீட்டு தற்போது குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரத்திற்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் வரை ஒரு பயணசீட்டு விற்பனை செய்யப்படுகிறது.

கோவை- மும்பை இடையே இயக்கப்படும் ஒரு விமானத்தில் சாதாரண வகுப்பு, பிசினஸ் கிளாஸ், பிரீமியம் உள்ளிட்ட பல வசதிகளுடன் விமான பயணசீட்டு விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லி- கோவை இடையே வழக்கமாக ரூ.7,500-க்கு விற்பனை செய்யப்படும் பயணசீட்டு அதிகபட்சமாக ரூ.11,500-வரை விற்பனை செய்யப்படுகிறது.

கோவை - பெங்களூரு இடையே இரண்டு விமானங்கள் இயக்கப்படும் போதும் பயணசீட்டு முன்பதிவு வழக்கம் போலவே இருக்கும். விமானத்தை விட சாலை வழியாக பலர் பயணிப்பதே இதற்கு காரணம். தீபாவளி பண்டிகைக்கு பின் மீண்டும் மீண்டும் வழக்கம் போல் கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...

கோவை பீளமேடு பள்ளியில் போதை எதிர்ப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் உள்ள பீளமேடு தொடக்கப்பள்ளியில் போதைப்பொருள் தீமைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்...