கோவையில் நள்ளிரவில் சாலையில் நின்றிருந்த ஆட்டோ கண்ணாடியை அடுத்து உடைத்த மர்ம நபர் - பரபரப்பு

போத்தனூர் அடுத்த முத்தையா நகரில் சாலையில் நின்றிருந்த ஆட்டோவின் கண்ணாடியை அடித்து உடைத்த மர்ம நபரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் போத்தனூர் முதலியார் வீதி, முத்தையா நகர் பகுதியை சேர்ந்தவர் தனகோபாலசாமி மகன் இமயநாதன் (43). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.

இந்நிலையில் நேற்று பணி முடிந்து சென்ற இமயநாதன் வீட்டின் அருகே தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். இதனிடையே நள்ளிரவில் அவரது வீட்டின் அருகே கண்ணாடி உடையும் சத்தம் கேட்டுள்ளது.

அப்போது, இமயநாதன் வெளியே வந்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் ஆட்டோவின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்துக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து இமயநாதன் உடனடியாக அருகே சென்று அவரிடம் கேட்டபோது, அந்த மர்ம நபர் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதுதொடர்பாக, இமய நாதன் போத்தனூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆட்டோ கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிச்சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...