கார் வெடித்த சம்பவம் குறித்த வழக்கை முதலமைச்சர் கௌரவம் பாராமல் என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்ற வேண்டும் - கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக முதலமைச்சர் பேசாமல் இருப்பது ஏன்? என்றும், திருமாவளவன், சீமான், இடதுசாரிகள் போன்ற அரசியல் கட்சி தலைவர்கள் அமைதி காப்பது ஏன்? எனவும் வானதி சீனிவாசன் கேள்வி.



கோவை: டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் கடந்த 23ஆம் தேதி அதிகாலை மாருதி காரில் இருந்த சிலிண்டர் வெடித்தது.



இதில் காரில் இருந்த உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் என்ற இளைஞர் உயிரிழந்தார்.



இச்சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் உக்கடம் ஜி.எம்.நகர் பகுதியைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவர்கள் மீது உபா (UAPA) சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்நிலையில் பாஜகவினர் ஈஸ்வரன் அருளால் பெரும் அசம்பாவிதம் நடைபெறாமல் கோட்டை ஈஸ்வரன் கோவை மக்களை காத்தருளியதாக கூறி கோவிலில் பிரார்த்தனை மேற்கொண்டனர்.



இதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.



இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் பேசியதாவது, பயங்கரவாத தாக்குதலின் ஆரம்ப முயற்சி இறைவன் அருளாள் தவிர்க்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான மக்களை கொல்ல மேற்கொள்ளப்பட்ட சதி இறைவனின் கோவில் வாயிலிலேயே முறியடிக்கப்பட்டு, இறைவன் அருளால் மக்கள் காப்பற்றப்பட்டு உள்ளனர். எனவே இறைவனுக்கு நன்றி சொல்ல வந்துள்ளேன்

தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் யாரும் கோவை வரவில்லை. மேலும் முதல்வர் இங்கு வந்து பார்க்காததும் இதுகுறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காததும் பெரும் கண்டனத்திற்குரியது.

முதல்வர் இன்னும் கோவையை பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்படுகிறார் என்ற எண்ணம் சட்டமன்ற உறுப்பினராக தனக்கு எழுகிறது. தமிழகத்தில் உளவுத்துறை முற்றிலும் செயலிழந்து இருப்பதாக தெரிகிறது.

தேசிய புலனாய்வு முகமையிடம் இந்த விசாரணையை ஒப்படைக்க வேண்டும். இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கௌரவம் பார்க்க கூடாது. இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தேசிய அளவில் தொடர்பு உள்ளது. தமிழக காவல்துறை மட்டுமே இந்த விசாரணையை மேற்கொண்டு நிறைவான முடிவினை கட்ட முடியாது.

மேலும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு கோவை மண்ணை காப்பதற்கு பாஜக என்ன செய்யும் என்பதை இன்று மாலை அறிவிக்கிறோம். மைனாரிட்டி மக்கள் அளித்த பிச்சை என பேசக்கூடிய நபர்கள் இந்த ஆட்சியில் இருக்கின்றனர்.

எனவே மைனாரிட்டி மக்கள் ஓட்டுக்காக பிற மக்களின் உயிர்களை பலி கொடுக்கலாம் என்ற முடிவிற்கு முதல்வர் வருகிறாரா?. பயங்கரவாத செயலில் ஈடுபட்டு சிறையில் உள்ளவர்களை வெளியே விட கோரிக்கை வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும் திருமாவளவன், சீமான், கம்யூனிஸ்ட் கட்சியினர் கூட்டணி கட்சியின் தலைவர்கள் கோவை விஷயத்தில் ஏன் அமைதியாக உள்ளார்கள். தமிழக முதல்வர் கோவை வந்து மக்களை சந்திக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...