கோவை துடியலூர் அருகே 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது

துடியலூர் அருகே 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுமியின் உறவினரான வசந்த் என்ற இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: துடியலூர் அருகே வசித்து வந்த 13 வயது சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அவரது பெற்றோர்கள் அவரை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி தற்போது 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மருத்துவமனை தரப்பில் துடியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் மருத்துவமனைக்கு வந்த போலீசார் நடத்தி தீவிர விசாரணை நடத்தினர். இதில், அந்த சிறுமியின் உறவினரான வசந்த் (19) என்ற இளைஞர் சிறுமியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து உறவினர் வசந்தை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...