கோவை கார் வெடிப்பு வழக்கு: ஆறாவதாக கைது செய்யப்பட்ட அப்சர்கானை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு

வழக்கில் ஆறாவதாக நேற்று இரவு கைது செய்யப்பட்ட அப்சர்கான் என்பவரை போலீசார், இன்று ஜெ எம் 5 நீதிபதி சந்தோஷ் முன்பாக ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அப்சல்கானை நவம்பர் 10 ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.



கோவை: கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் வெடித்த வழக்கில் ஆறாவதாக நேற்று இரவு கைதான அப்சர்கானை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.



கோவையில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கார் சிலிண்டர் வெடிப்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு உபா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த ஐந்து பேரையும் மூன்று நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.



இந்த நிலையில் அதே வழக்கில் ஆறாவதாக நேற்று இரவு கைது செய்யப்பட்ட அப்சர்கான் என்பவரை போலீசார், கோவை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக இன்று அழைத்து வந்தனர்.

அதனை தொடர்ந்து ஜெ எம் 5 நீதிபதி சந்தோஷ் முன்பாக ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி சந்தோஷ் அப்சல்கானை நவம்பர் 10 ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.



அதையடுத்து போலீசார் அப்சர்கானை கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

மேலும், இந்த வழக்கானது தேசிய புலனாய்வு அமைப்பான NIA க்கு முழுமையாக மாற்றப்பட உள்ள நிலையில், தமிழக போலிசாரிடம் இருந்து இதுவரை இந்த வழக்கு தொடர்பான ஆவனங்களை NIA அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் வேலையில் தமிழக காவல்துறையினர் ஈடுபட்டுவருவதாக கோவையில் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக எஸ்.பி.வேலுமணி பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி சட்டப்...

கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திரு...

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....