திடக்கழிவுகளை முறையாக பிரித்து மாநகராட்சியால்‌ அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம்‌ ஒப்படைக்க வேண்டும்‌ - கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப்

பெருங்கழிவுகளை உருவாக்கும் வணிக வளாகங்கள்‌, அரசாங்க அலுவலகங்கள்‌, திருமண மண்டபங்கள்‌ உள்ளிட்டவை திடக்கழிவுகளை முறையாக பிரித்து மாநகராட்சியால்‌ அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம்‌ ஒப்படைக்க ஆணையர் பிரதாப் உத்தரவு.



கோவை: கோவையில் அதிகளவிலான கழிவுகளை உருவாக்கும் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை திடக்கழிவுகளை முறையாக பிரித்து அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம்‌ ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை‌ மாநகராட்சியில்‌ திடக்கழிவு மேலாண்மை பணிகள்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கோவை‌ மாநகராட்சியில்‌ ஒரு நாளைக்கு குறைந்தது 850 டன்‌ முதல்‌ 1100 டன்‌ வரையிலான திடக்கழிவுகள்‌ சேகரிக்கப்பட்டு முறையாக அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

நாளொன்றுக்கு 100 கிலோவுக்கு மேல்‌ திடக்கழிவு உருவாக்கும்‌ அடுக்குமாடி குடியிருப்புகள்‌, வீட்டுச் சமூகம்‌, வணிக வளாகங்கள்‌, அரசாங்க அலுவலகங்கள்‌, திருமண மண்டபங்கள்‌, காய்கறி சந்தைகள்‌, அங்காடிகள்‌, கல்வி நிறுவனங்கள்‌, மருத்துவமனைகள்‌, வழிபாட்ட்டுத் தலங்கள்‌, விளையாட்டு அரங்கம்‌, உணவகங்கள்‌ ஆகியவை மொத்த கழிவு உற்பத்தியாளர்கள்‌ என குறிப்பிடப்படுகிறது.

கோவை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள்‌ 2016, கோவை‌ மாநகராட்சி சட்டம்‌ 1981 (தமிழ்நாடு சட்டம்‌ 25/1981)432 பிரிவின்‌ கீழ்‌ உபவிதிகள்‌ 10ன்‌ படி பெருமளவு கழிவுகள்‌ உருவாக்குபவர்களே கழிவுகளை மேலாண்மை செய்ய வேண்டும்‌.

மத்திய அரசு திடக்கழிவு மேலாண்மை விதிகள்‌ 2016 விதிகள் ‌4, உபவிதிகள்‌(6)(7) மற்றும்‌ (89ல்‌ பெருங்கழிவு உருவாக்குபவர்கள்‌ திடக்கழிவுகளை முறையாக பிரித்து உள்ளாட்சி துறையினரால்‌ அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம்‌ ஒப்படைக்க வேண்டும்‌.

மேலும்‌ கோவைமாநகராட்சியின்‌ அங்கீகாரம்‌ பெற்ற (Empaneled Agencies) பற்றிய விவரங்களை www.ccmc.gov.in என்ற மாநகராட்சியின்‌ இணையதளத்தின்‌ வாயிலாக அறிந்து கொள்ளலாம்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...