கோவை கார் வெடி விபத்து வழக்கு: சம்பவ இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு; அப்பகுதி மக்களிடம் விசாரணை.

வழக்கு எண்.ஐ. ஏ வுக்கு மாற்றப்பட்ட நிலையில், இன்று முதல் புலன் விசாரணையை என்.ஐ. ஏ அதிகாரிகள் துவக்கியுள்ளனர். சம்பவம் நடைபெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் என்.ஐ. ஏ அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர்.


கோவை: கோவை உக்கடம் கோட்டைமேடு அருகே உள்ள கோட்ட ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23ஆம் தேதி சாலையில் சென்ற கார் வெடித்து சிதறியது. இதில் அதே பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.

இந்நிலையில் தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள் நேரடி விசாரணை மேற்கொண்டனர். இதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் சோதனை செய்த போது அங்கு வெடிகுண்டு தயாரிக்கும் பல்வேறு மூலப்பொருட்கள் உள்ளிட்ட 109 முக்கிய பொருட்கள் கண்டறியப்பட்டது.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக 6 பேர் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக கருதப்படுவதால் வழக்கு விசாரணை என்,ஐ.ஏ விற்கு மாற்ற தமிழக முதல்வர் பரிந்துரை செய்தார்.

இந்த வழக்கில் இதுவரை 52 சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 60க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விசாரணை கோப்புகளை மாநகர போலீசார் என்.ஐ.ஏ விடம் ஒப்படைத்தனர்.



இதையடுத்து, உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் என்.ஐ.ஏ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர். இதில் முதல்முறையாக சம்பவம் நடந்த கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே என்.ஐ.ஏ அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணையை துவங்கி உள்ளனர்.



அதற்கு முன்னதாக அப்பகுதி முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் கண்காணிக்கும் பணியை மாநகர போலீசார் ஈடுபட்டனர்.



இந்நிலையில், சுமார் நான்கு என்.ஐ.ஏ அதிகாரிகள் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே ஆய்வை துவங்கினர். இந்த நிலையில் தற்போது சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொள்ள சென்ற அதிகாரிகள் உள்ளூர் மக்களிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முன்னதாக, கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.



மேலும் இந்த வழக்கை விசாரித்த மாநகர தனிப்படை போலீசில் சில ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் என்.ஐ.ஏ அதிகாரிகளுடன் விசாரணைக்கு செல்ல இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...