கோவை கார் வெடிப்பு சம்பவம் - உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம்

இன்று காலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து, கோவில் பூசாரிகளிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.



கோவை: கோவையில் கடந்த 23ஆம் தேதி டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் வெடித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து, தற்போது NIA அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோட்டை ஈஸ்வரன் சுவாமியால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக பாஜக, இந்து மக்கள் கட்சி உட்பட பல்வேறு இந்து அமைப்பினர், சிறப்பு பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.



இந்நிலையில், இன்று காலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து கோவில் பூசாரிகளிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட பாஜக நிர்வாகிகள், இந்து மக்கள் கட்சியினர் என பலர் உடன் இருந்தனர். மேலும், கோவையில் பாஜக மகளிர் அணி சார்பில் கோவிலில் கூட்டு பிராத்தனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கலந்து கொண்ட மகளிர் கந்தசஷ்டி கவசத்தை வாசித்தனர்.



இன்று கோட்டை ஈஸ்வரன் கோவிலில், பாஜக மாநிலத் தலைவர் வருகையை ஒட்டி அப்பகுதி முழுவதும் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.





Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...