கோவையில் திமுக சார்பில் நாளை நடைபெறவிருந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

கணபதி அருகே கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் நடைபெறவிருந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் தொடர்மழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக நா.கார்த்திக் அறிக்கை.


கோவை: கோவை மாவட்ட திமுக சார்பில் கணபதி அருகே நாளை நடைபெறவிருந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் கணபதி பகுதி, பழைய சத்தி சாலையில், நாளைய தினம் (4-11-2022) வெள்ளிக்கிழமை இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தொடர் மழை காரணமாக இந்தித் திணிப்பு எதிர்ப்புத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதை, கோவை மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்துக் கழக நிர்வாகிகள், அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழக உடன்பிறப்புகள், கழகத் தொண்டர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...