நீலகிரியில் டைடல் பார்க் அமைவதால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் 100 கோடி அளவுக்கு நிறுவனங்கள் முதலீடு செய்யும் வாய்ப்புள்ளது அமைச்சர் தங்கம் தென்னரசு உரை

நீலகிரி மாவட்டத்தில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு அதற்கான பணி மற்றும் தற்போதைய நிலவரம் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


நீலகிரி: தமிழக அரசின் டிட்கோ நிறுவனத்தின் சார்பில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கையை அடுத்து கடந்த பட்ஜெட் கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு வெளியிட்டார்.



அது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறுகையில்:-

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் வகையில் நீலகிரியில் தொழில் நடவடிக்கையாக இத்தகைய தொழில்நுட்ப பூங்கா அவசியமாகிறது மிக விரைவில் கட்டப்படுவதற்கு இதற்கு உரிய இடத்தை தேர்வு செய்ய ஆய்வு மேற்கொண்டோம்.

உதகையில் ஹெச்பிஎப், நகராட்சி நிலம், கால்நடை பராமரிப்புத்துறை நிலங்களை பார்வையிட்டோம். அதில் ஹெச்பிஎப் பகுதியில் 90 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் 5 ஏக்கர் அங்கிருந்து பெற்று அமைக்கப்படும். வனத்துறை அனுமதி பெற்று டிட்கோவுக்கு நில மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளபடும்.

நீலகிரிக்கு மாஸ்டர் பிளான் உள்ளது அதற்கு பிரத்யேகமாக வடிவமைப்பு தேவை. அதன்படி டைடல் பார்க் கட்டுமானங்கள் அமைக்கப்படும். டைடல் பார்க் மூலம் நீலகிரி மாவட்டத்தில் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் இதனால் மேலும், ரூ.100 கோடி அளவுக்கு நிறுவனங்கள் முதலீடு செய்யும் வாய்ப்புள்ளது.

தமிழகத்தை நோக்கி ஐடி நிறுவனங்கள் வர விருப்பம் தெரிவத்துள்ளனர். கோவை டைடல் பார்க்கில் தற்போது இடம் இல்லை. நீலகிரியில் டைடல் பார்க் அமைந்தால் நீலகிரிக்கு இந்த நிறுவனங்கள் வரும். இதனால், வேலைவாய்ப்பு பெருகும். ஐடி துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. தமிழகத்துக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூட வர தயாராக உள்ளது.

நீலகிரி மாவட்டத்துக்கு தொழில்துறைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதால், டைடல் பார்க் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொழில்துறையில் ஜிஎஸ்டி பிறகு தேக்க நிலை இருந்தது. கரோனா காரணமாக தொழில்துறைக்கு பின்னடைவு ஏற்பட்டது. கரோனா காலக்கட்டத்திலும் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் உள்ளூர் உற்பத்தி 9% பங்களிப்பு குறையாமல் இருந்தது.

தொழில் முடங்கும் வாய்ப்பளிக்கவில்லை. முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழகத்தல் ரூ.2.5 லட்சம் கோடிக்கு முதலீடு ஈர்த்துள்ளோம். தொழில்புரட்டி 4.0 மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழல்நுட்பத்தை பயன்படுத்தும் திறன்மிகு நிறுவனங்கள் மீது கவனம் செலுத்துகிறோம்.

தமிழகத்தில் அதிகளவில் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. பொறியாளர்கள், பாலிடெக்னிக் மாணவர்களின் திறன் மிக பெரிய அளவில் உள்ளது. அவர்களின் திறனை பயன்படுத்த தொழில்துறை, உயர்கல்வி கல்விதுறை மற்றும் எம்எஸ்எம்இ ஆகியவை ஒன்றிணைந்து அதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்’ என்றார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...