கோவை கார் வெடிப்பு: கோவை உட்பட தமிழகம் முழுவதும் நடந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நிறைவு - பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் என தகவல்

சோதனையில், பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க், செல்போன்கள் போன்ற டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் குற்ற சம்பவம் தொடர்பான ஆவணங்களை தேசிய புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னை, கோவை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 42 இடங்களிலும், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்திலும் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

சென்னை, கொச்சின் ஆகிய பகுதிகளில் இருந்து வந்துள்ள என்.ஐ. ஏ அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.



குறிப்பாக, கோவையில் இன்று காலை முதல்கோட்டை மேடு, உக்கடம், பொன்விழா நகர், ரத்தினபுரி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட இடங்களில் மற்றும் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் வீடுகளிலும் சோதனையானது நடைபெற்று வந்தது.



குறிப்பாக, மத்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்தவர்கள் வீடுகளிலும் இந்த சோதனை நடைபெற்றது. காலை முதல்நடந்த இந்த சோதனையானது தற்போது நிறைவடைந்த நிலையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, கார் வெடிப்பில் இறந்தஜமேசா முபின் சதி திட்டத்தை அரங்கேற்ற 3 இரும்பு டப்பாக்களை வாங்கிய நாசர் என்பவரது வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.



இந்த சோதனையில், பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க், செல்போன்கள் போன்ற டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் குற்ற சம்பவம் தொடர்பான ஆவணங்களை தேசிய புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் 23 ஆம் தேதி, கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு, தேசிய புலனாய்வு அதிகாரிகள் தற்போது விசாரணையை துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...