கோவை வருமான வரித்துறை அலுவலகம் முன்பு வரும் 16 ம் தேதி ஆர்ப்பாட்டம் - கு.இராமகிருட்டிணன் அறிவிப்பு

வருமான வரி வரம்பை அனைவருக்கும் 8 லட்சமாக நிர்ணயம் செய்ய என வலியுறுத்தி சென்னை, கோவையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு வரும் 16 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தபெதிக பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன் அறிவித்தார்.


கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் தபெதிக பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய அவர் உயர்சாதி ஏழைகள் என்பவர்களுக்கு அளவுகோலாக ஆண்டிற்கு 8 லட்ச ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் ஒன்றிய அரசின் வருமான வரி செலுத்தும்வரம்பு5லட்சம் என வருமான வரித்துறை நிர்ணயம் செய்துள்ளது.ஆண்டிற்கு 8லட்சம் சம்பாதிப்பவர்கள் ஏழைகள் என்றால், 5 லட்சம் சம்பாதிப்பவர்களைபரமஏழை என வருமான வரித்துறை அறிவிக்க வேண்டும்.



வருமான வரிவரம்பை அனைவருக்கும் 8 லட்சமாக நிர்ணயம் செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி சென்னை,கோவையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு வரும் 16 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...