கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற 'லோக் அதாலத்' மக்கள் நீதிமன்றம்

நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் 'லோக் அதாலத்' மக்கள் நீதிமன்ற நிகழ்வு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.


கோவை: நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகமாக தேங்குவதை தவிர்க்கவும், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணவும் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மற்றும் மாநில அளவிலான 'லோக் அதாலத்' மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது.



அதன்படி, சட்டப்பணி ஆனைக் குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான ராஜசேகர் தலைமையில்,கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் லோக் அதாலத் நிகழ்வு நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை நீதிபதிகள் கோவிந்தராஜன், குலசேகரன், முரளிதரன், ராமகிருஷ்ணன், சஞ்சீவி பாஸ்கர் மற்றும் மாவட்ட சட்டக் குழு ஆணையத்தின் செயலாளர் சார்பு நீதிபதி கங்கா ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.



இதில், நிலுவையில் உள்ள சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை மோசடி மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், குடும்ப பிரச்சினை வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளுக்கு சமரச முறையில் அன்றைய தினமே தீர்வு காணும் வகையில் பல்வேறு அமர்வுகளாக நடைபெற்றது.

இந்த மக்கள் நீதிமன்றமானது கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, மதுக்கரை, சூலூர் ஆகிய நீதிமன்றங்களில் நடக்கிறது.



பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நீதிமன்றங்களில் ஆஜராகி வழக்குகளில் சமரசம் செய்து கொண்டு வழக்கை முடித்துக்கொள்ளலாம்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...