9 மாதம் முதல் 15 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்


9 மாதம் முதல் 15 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.



கோவை மாநகராட்சி ராமலிங்க காலனி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று பொது சுகாதாரத்துறை மூலம் தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தொடங்கி வைத்து தெரிவிக்கையில்,

தமிழகத்தில் தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்றிலிருந்து வரும் பிப்ரவரி 28-ம் தேதி வரை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் 1987 மையங்களில் சுமார் 7.8 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் நடைபெறுகிறது. 



இப்பணிக்கென சுகாதாரத்துறையின் மூலம் 450-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத் துறையின் மூலம் 966 பணியாளர்களும், 2000-க்கும் மேற்பட்ட பள்ளி ஆசிரியர்களும் இம்முகாமில் பங்குபெற்று பணியாற்ற உள்ளார்கள்.

மேலும், அனைத்து பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாவட்ட காவல்துறை, ரோட்டரி சங்கம், அரிமா சங்கம், இந்திய செஞ்சிலுவைச்சங்கம், மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. 



மேலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் இச்சிறப்பு முகாம் குறித்தும் பெற்றோர்களுக்கு தடுப்பூசி நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் ஒளிப்பெருக்கி, குறுந்தகடுகள் மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதேபோல், பள்ளிகளில் மாணவ மாணவியர்களிடமும் இதன் அவசியத்தினை தெரிவித்து வீட்டிலுள்ள பெற்றோரிடம் தெரிவித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது மட்டுமின்றி பள்ளிகளுக்கு வராத குழந்தைகளுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 

இதற்கு பெற்றோர்களும் உறுதுணையாக இருந்து மாவட்டத்தில் ஒரு குழந்தைகூட விடுபடாத வகையில் தடுப்பூசி போட்டு ஆரோக்கியத்தினை பாதுகாத்திட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் எட்வின் ஜோ, துணை இயக்குநர் (சுகாதார நலப்பணிகள்) பானுமதி, மாநகராட்சி மருத்துவ அலுவலர் சந்தோஷ் மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்வின் ஒரு பகுதியாக பிஐடி மற்றும் சர்வதேச மூன்றாவது துணைத் தலைவர் (பரிந்துறை) பிஎம்ஜேஎப் லையன் ஜி.ராமசாமி, லையன்ஸ் கிளப்பின் சார்பில் தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய்கள் குறித்து தயாரிக்கப்பட்ட விளம்பர குறுந்தகட்டினை (சிடி) வெளியிட்டார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...