100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் வேலை வழங்க கோரி மசாண்டிபாளையம் கிராம மக்கள் மனு


கோவை மாவட்டம், காரேகவுண்டம்பாளையம் பகுதி 7-வது வார்டுக்குட்பட்ட மசாண்டிபாளையம் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் வேலை வழங்க கோரி இன்று மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று மனு அளித்தனர். 



இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

மசாண்டிபாளையம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. அதில் 320-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ள குடுப்பதாரர்களும் உள்ளனர். 

எங்கள் ஊரில் குளம், குட்டைகள் அனைத்தும் உள்ளன. ஆனால் எவ்வித பராமரிப்பும் செய்யப்படவில்லை. மேலும், சில வருடகாலமாகவே எவ்வித வேலைவாய்ப்பும் இன்றி நாங்கள் சிரமப்பட்டு வருகிறோம்.

எனவே, எங்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலமாக வேலை வழங்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...