கோத்தகிரி அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலையோர மண் திட்டில் மோதி பயங்கர விபத்து - 20 பேர் படுகாயம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து குன்னூருக்கு சென்ற அரசு பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மண் திட்டில் மோதிய விபத்தில், 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலிருந்து இன்று காலை குன்னூருக்கு அரசு பேருந்து ஒன்றி பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டு சென்றது.



இந்நிலையில், பேருந்து கோத்தகிரியில் உள்ள கே.பி.எஸ் கல்லூரி அருகே சென்ற போது பேருந்தில் பிரேக் பிடிக்காமல் ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியவாறு சாலை ஓரத்தில் உள்ள மண் திட்டில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பைக்கில் வந்த மகேந்திரன் என்பவர் பலத்த காயமடைந்த நிலையில் அரசு பேருந்தில் பயணம் செய்த ஒட்டுநர் உட்பட 19க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் விபத்தில் படுகாயமடந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட மருத்துவர்கள் நிலையில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே பேருந்தை இயக்கிய ஒட்டுநர் ரகுராதன் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வந்த மகேந்திரன் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.



சம்பவம் குறித்து கோத்தகிரி போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் காலாவதியான அரசு பேருந்தை இயக்கியதே விபத்துக்கு காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...