கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் தர்ணாவில் ஈடுபட்ட பெண் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு

கண்ணப்ப நகர் பகுதியை சேர்ந்த கீதாராணி, தனது வீட்டின் மின் இணைப்பை கோவை குமார் என்பவர் துண்டித்த நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட போது திடீரென மயங்கி விழுந்தார்.



கோவை: கோவை கண்ணப்ப நகர் பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடேஷ் - கீதாராணி தம்பதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் அங்குள்ள லைன் வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இவர்களது உறவினரான கோவைகுமார் என்பவர் கடந்த வாரம் வீட்டின் மின் இணைப்பை துண்டித்து விட்டுச் சென்றுள்ளார். மேலும் மின் இணைப்பை கொடுக்க கூடாது என மின்வாரிய ஊழியர்களையும் கோவைகுமார் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக இருளில் இருந்ததாக வெங்கடேஷும் கீதாராணியும், ரத்தினபுரி மற்றும் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுதொடர்பாக எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிகிறது.



இதன் காரணமாக கணவன் மனைவி இருவரும் தங்களது 2 மகன்களுடன் கோவை ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பிரதான சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.



அப்போது கீதாராணி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களை மீட்டு, சமாதானப்படுத்தி அழைத்துச் சென்று, சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண், திடீரென மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...