ஸ்கிராப் தொழிலில் ஈடுபடுபவர்கள் சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் குறித்து காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் - காவல்துறை அறிவுரை

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், நடைபெற்ற ஸ்கிராப் தொழில் நிறுவன உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில், காவல்துறையின் 5 விதமான விதிகளுக்கு உட்பட்டு நடப்பதாக உறுதி ஏற்றுக் கொண்டனர்.



கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் போக்குவரத்து துணை ஆணையாளர் அசோக்குமார் தலைமையில் பழைய வாகனங்களை உடைத்து உதிரிபாகங்கள் மற்றும் இரும்பு சாமான்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட உதிரி பாக விற்பனையாளர்கள், வியாபாரிகள் மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஒர்க் ஷாப் உரிமையளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



இந்த ஆலோசனை கூட்டத்தில் வியாபாரிகளுக்கு காவல்துறை அதிகாரிகள் சட்ட விதிகளையும், நிபந்தனைகளை எடுத்துரைத்தனர்.

அவை,

1) பழைய வாகனங்களை உடைத்து உதிரி பாகங்களை விற்பனை செய்ய முறையான அனுமதி மற்றும் உரிமம் பெற வேண்டும்.

2) தாங்கள் பெறும் உரிமத்தை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.

3) பழைய வாகனங்களை உடைத்து உதிரி பாகங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள், தங்கள் கடைகளுக்கு வரும் வாகனங்கள் மற்றும் உடைக்கப்பட்ட வாகனங்களை பதிவு செய்து பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்.

4) கடைக்கு கொண்டுவரப்படும் வாகனங்கள் திருட்டு வாகனங்களாக இருந்தாலோ அல்லது சந்தேகத்துக்கு இடம் அளிக்கக் கூடிய வாகனங்களாக இருந்தாலோ உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

5) உரிமம் வைத்திருப்பவர்கள் இரண்டாவது முறையாக நிபந்தனைகளை மீறும் பட்சத்தில், தவறு செய்த நபருக்கு இரண்டு வருடம் சிறை தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



இந்நிலையில், இறுதியாக கூட்டத்தில் பங்கேற்ற விற்பனையாளர்கள் காவல்துறையின் சட்ட திட்ட விதிகளுக்கு உட்பட்டு நடப்பதாக உறுதியளித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...