நியூசிலாந்தில் வேலை வாங்கி தருவதாக 44 பேரிடம் மோசடி - கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

கோவை பீளமேடு ஹட்கோ காலனியில் வசித்து வரும் தமிழ்செல்வன் என்பவர் தனது குளோபல் பிளேஸ்மென்ட் நிறுவனத்தின் மூலம் நியூசிலாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்ச கணக்கில் மோசடி செய்துள்ளார். 44 பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு தமிழ்ச்செல்வன் கைது செய்யப்பட்டார்.



கோவை: தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டையை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (29) கோவை பீளமேடு ஹட்கோ காலனியில் வசித்து வருகிறார். இவர் பீளமேடு அண்ணாநகர் பகுதியில் எஸ்.டி. குளோபல் பிளேஸ்மென்ட் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.



ஆன்லைன் மூலமாக தனது நிறுவனம் தொடர்பான தகவல்களை வெளியிட்ட தமிழ்ச்செல்வன் நியூசிலாந்தில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வதாகவும், நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி கொடுப்பதாகவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஆனால் தமிழ்செல்வன் வெளிநாட்டுக்கு ஆள்களை அனுப்பும் எந்த அனுமதியையும் முறையாக இவர் பெறவில்லை. ஆன்லைன் அறிவிப்பை நம்பி பலரும் தமிழ்ச்செல்வனை தொடர்பு கொண்டுள்ளனர்.

மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் முன் பணமாக ரூ.1லட்சம் முதல் 3லட்சம் வரை பணம் வசூலித்துள்ளார்.



மேலும் அவர்களது பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்துக்கொண்ட தமிழ்செல்வன் பணம் செலுத்தியவர்கள் நம்புவதற்காக வேலை கிடைத்ததற்கான போலி கடிதத்தை தயாரித்து அனுப்பியுள்ளார். மேலும் விமான டிக்கெட்டுகளையும் எடுத்து அதன் காப்பியையும் அனுப்பி கூடுதலாக பணம் வசூலித்து வந்துள்ளார்.

பணம் வசூலித்த பின்னர் விமான டிக்கெட்டை ரத்து செய்துவிடுவார். ஆனால் இது எதுவும் அறியாமல் விமான டிக்கெட் வந்துவிட்டது வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பலரும் பணம் செலுத்தியுள்ளார்கள்.

மதுரை செல்லூரை சேர்ந்த விஜயன் என்பவர் வேலை கிடைக்காததால் கோவை வந்து விசாரித்த போதுதான் தெரியவந்துள்ளது தமிழ்ச்செல்வன் மோசடி செய்துள்ளது. இதையரிந்து அதிச்சியடைந்த விஜயன் இதைத்தொடர்ந்து கோவை நகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்துள்ளார்.



விஜயனில் புகாரை தொடர்ந்து அதேபோல் மேலும் 16 பேர் தமிழ்ச்செல்வன் மீது புகார் செய்துள்ளனர். போலீஸ் உதவி ஆய்வாளர் ஞானபிரகாஷ் புகாரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தமிழ்ச்செல்வனின் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது தமிழ்செல்வன் வேலை கேட்டு பணம் செலுத்தியவர்கள் பலரிடம் வாங்கி வைத்து இருந்த 44 பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்ச்செல்வன் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

தற்போது 16 பேர் மட்டும் ரூ.17 லட்சம் அளவுக்கு பணத்தை இழந்துள்ளதாக புகார் செய்துள்ளனர். 44 பேரிடம் லட்சக்கணக்கில் மோசடி நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து இருப்பதால் வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும். மோசடி நிறுவனங்களில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...