கோவை பெரிய கடை வீதியில் தீபத்திருவிழா கண்காட்சி மற்றும்‌ விற்பனை தொடக்கம் - டிச.10 வரை நடைபெறும் என அறிவிப்பு

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு கோவை பெரிய கடை வீதியில் பல்வேறு வகைகளான விளக்குகளின் கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியுள்ளது.


கோவை: பூம்புகார்‌ என்ற பெயரால்‌ அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு நிறுவனமான, தமிழ்நாடு கைத்திறத்‌ தொழில்கள்‌ வளர்ச்சிக்கழகம், கைவினைப்பொருட்கள்‌ உலகில்‌ தனியதொரு இடத்தைப்பிடித்துள்ளது. தொன்மையான கலைகளை பாதுகாப்பதோடு கைவினைஞர்களின்‌ வாழ்கைத்தரத்தை மேம்படுத்தவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும்‌ பண்டிகைக்காலங்களில்‌ பல கண்காட்சிகளை நடத்தி வருவதைப்போல இந்த ஆண்டும்‌ தீபத்திருவிழா கண்காட்சி மற்றும்‌ விற்பனை கோவை பெரிய கடை வீதியில் உள்ள பூம்புகார்‌ விற்பனை நிலையத்தில் தொடங்கியுள்ளது.



இக்கண்காட்சியினை கோவை Ananya குழுமத்தின் இணை மேலாண்மை இயக்குநர்‌ டாக்டர். உமா மகேஸ்வரி யுவராஜ்‌, குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.



வரும் டிசம்பர் 10 ஆம் தேதி வரை தினசரி காலை 10.00 மணி முதல்‌ இரவு 8.00 மணி கண்காட்சி நடைபெற உள்ளது.



தீபத்திருவிழா கண்காட்சியில்‌ பாலாடை விளக்கு, விஷ்ணு விளக்கு, கஜலட்சுமி விளக்கு, கணபதி விளக்கு, ரங்கநாதர்‌ விளக்கு, மூகாம்பிகை விளக்கு, அருணாச்சலேஸ்ர்‌ விளக்கு, பகவதி அம்மன்‌ விளக்கு, பாலாஜி விளக்கு, கிளி விளக்கு, அன்னம்‌ விளக்கு, கிளை விளக்கு, தொங்கு விளக்கு, மலபார்‌ விளக்கு, நந்தா விளக்கு, குபேர விளக்கு ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.



மேலும் பித்தளை மற்றும்‌ மண்‌ அகல்‌ விளக்கு, பாவை விளக்கு, யானை விளக்கு, சிலுவை விளக்கு, சங்கு சக்கர விளக்கு, மங்கள விளக்கு, பிரபை விளக்கு, தேவியார்‌ விளக்கு, கண்ணாடி விளக்கு, தாமரை விளக்கு, உருளி விளக்கு, இலை விளக்கு, தாண்டா மணி விளக்கு, கும்ப தீபம்‌, மாட விளக்கு, பஞ்சபூத விளக்கு, அடுக்கு தீபம்‌, அஷ்டோத்தர விளக்கு, ரத தீபம்‌, கேரளா பேன்சி விளக்கு, சக்கரத்‌ காழ்வார்‌ விளக்கு, ஐய்யப்பன்‌ விளக்கு, ஆமை தீபம்‌, நகாஸ்‌ வேளைப்பாடு விளக்கு, மாவு கல்‌ விளக்கு, மூலிகை சங்கு தீபம்‌ உள்ளிட்ட ஏராளமான விளக்குகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.



இக்கண்காட்சியில்‌ விற்பனை செய்யப்படும்‌ அனைத்து விளக்குகளுக்கும்‌ 10% சதவிகிதம்‌ சிறப்புத்தள்ளுபடி வழங்கப்படுகிறது.



அனைத்து கடன்‌ அட்டைகளும்‌ எவ்வித சேவைக்கட்டணமுமின்றி ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...