கோவையில் பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான 'மாற்றத்தை உருபாக்குபவள்' திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்கம்

காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் கூட்டரங்கில் நடைபெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்ற பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், அறிவுரைகளை வழங்கினார்.


கோவை: கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் கூட்ட அரங்கில் தேசிய மகளிர் ஆணையம் சார்பில் தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம் மூலம் "மாற்றத்தை உருபாக்குபவள்" என்ற பெயரில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி துவங்கியது.



இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் பெண் மேயர்கள், துணை மேயர்கள், நகர் மன்ற தலைவர்கள் என தமிழகம் முழுவதும் இருந்து 35 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.



இந்த திறன் வளர்ப்பு பயிற்சி முகாமில் கோவை, மதுரை, கரூர், வேலூர், தாம்பரம், திண்டுக்கல், சிவகாசி உள்ளிட்ட 10 மாநகராட்சி பெண் மேயர்கள், 6 பெண் துணை மேயர்கள், 16 பெண் நகராட்சி தலைவர்கள், 3 நகராட்சி பெண் துணை தலைவர்கள் என 35 பேர் இந்த முதல்கட்ட முகாமில் பங்கேற்றனர்.

தொடர்ந்து 5 கட்டங்களாக, தமிழகம் முழுவதும் இந்த திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்களானது பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு நடத்தப்பட இருக்கிறது.



கோவையில் இந்த திறன் வளர்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இந்த திறன் மேம்பாட்டு பயிற்சி கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பேசியதாவது, ஆண்கள், பெண்கள் ஆளுமைகளுக்கு இடையே வித்தியாசம் இருக்கிறது. குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்வதில் கூட பெண்கள் அதிகம் இருக்கின்றனர், ஆனால், ஆண்கள் சதவீதம் குறைவாக இருக்கிறது.

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை ஸ்கீரினில் 10 நிமிடம் தான் வருவார், நந்தினி 7 நிமிடம் தான் வருவார். ஆனால் படம் பார்த்தவர்கள் நந்தினியும், குந்தவையையும் பற்றி தான் பேசுகின்றனர்.

கலையில் சிறிய பங்களிப்பே பேச வைக்கிறது. ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த இடத்தில் நீங்கள் வேலை பார்க்கிறீர்கள், இதில் உங்கள் பங்களிப்பே முக்கியமானது. பெண் நிர்வாகிகளை பைத்தியம் என சொல்வார்கள், கேலி பேசுவார்கள், உங்கள் உடை, நடை பற்றி பேசுவார்கள்.

இதெல்லாம் கடந்த பின்னர் கடைசியாக அவர்கள் பின்தொடர்வார்கள். பெரிய பதவியில் இருக்கும் போது சில ஊடகங்கள், பொதுமக்கள், ஆளுமைகள் விமர்சனம் செய்வார்கள். பதவி ஏற்று 8 மாதம் தான் ஆகிறது.

இந்த அனுபங்களை கடந்து போக போக தான் உங்கள் ஆளுமை தெரியும். மூன்றாவது ஆண்டில் உங்களுக்கு சிறந்த ஆளுமை திறன் வந்துவிடும். ஆண்கள் எப்போதும் பாதுகாப்பின்மையாக இருக்கின்றனர். இந்த பாதுகாப்புமின்மை கோபம், தாபம், ஆதங்கமாக வெளி வருகின்றது.

அடுத்த தலைமுறைக்கு இந்த கட்டுப்பாடுகள் இருக்காது. பாலின அடையாளத்தை எப்போதும் தடையாக கொண்டு வரக்கூடாது. குற்ற உணர்வை தூண்டும் விதமாக செயல்பாடுகள் இருக்கும், அதை கடக்க பழகிகொள்ள வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சமீரன் பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...