கோவை வேளாண் பல்கலையில் தொழில் கூடங்களை பார்வையிட்ட மத்திய வேளாண் கூடுதல் செயலாளர்

கோவை வேளாண் பல்கலைகழகத்தில் அமைந்துள்ள தொழில் கூடங்களை பார்வையிட்ட மத்திய வேளாண்மை கூடுதல் செயலாளர் அபிலாஷ் லிக்கி, நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகள் குறித்து ஆசிரியர்கள் மற்றும் அறிவியலாளர்களிடம் கேட்டறிந்தார்.


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள தொழில் கூடங்களை மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கூடுதல் செயலாளர் அபிலாஷ் லிக்கி பார்வையிட்டார். அப்போது அங்குள்ள நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகள் குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கீதாலட்சுமி மற்றும் ஆசிரியர்கள், அறிவியலாளர்களிடம் கேட்டறிந்தார்.



அதனை தொடர்ந்து, வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தமிழக தேனீ வளர்ப்பாளர்களுடனான கலந்தாய்வுநடைபெற்றது. பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி மற்றும் பூச்சியியல் துறை தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அபிலாஷ் லக்கி,தேசிய தேனீ வாரியத்தின் இயக்குநர் பட்லே உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தேனீ வளர்ப்பாளர்கள் மற்றும் தேனீ ஆர்வலர்கள் பங்கேற்று, தேனீ வளர்ப்பு குறித்த தங்களது அனுபவங்கள், எதிர்கொண்ட சவால்கள், சந்தைப்படுத்துதல் குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.



இந்தக் கலந்தாய்வு கூட்டத்தில் தேன் சார்ந்த பொருட்களின் கண்காட்சியும் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.டி.பி. தேனீப் பண்ணை சார்பில் வடிவமைக்கப்பட்ட நவீன தேன் எடுக்கும் இயந்திரத்தை மத்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் செயலாளர் அபிலாஷ் லிக்கி, வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் தேனீ வளர்ப்பாளர்களுக்கும், தேனீ ஆர்வலர்களுக்கும் அறிமுகப்படுத்தினர். நவீன தேன் எடுக்கும் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து ஏ.டி.பி தேனீ பண்ணையின் உரிமையாளர் தண்டாயுதபாணி விளக்கமளித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...