அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் மீண்டும் தீ விபத்து; 2 ராணுவ வீரர்கள் படுகாயம்

இன்று காலை DSC செக்சனில் பைப் வெல்டிங் பணி நடந்து கொண்டிருந்த போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில், அங்கு பணியாற்றி வந்த ஹிமாஞ்சு, மனோஜ்குமார் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் இன்று மீண்டும் ஏற்பட்ட தீ விபத்தில், வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்த 2 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.



அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் இந்திய ராணுவத்திற்கு தேவையான வெடி பொருட்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த 19 ஆம் தேதி அதிகாலையில் தொழிற்சாலையில் உள்ள சிடி செக்சனில் பலத்த சப்தத்துடன் சிலிண்டர் வெடி விபத்து நடந்தது. அதில் 8 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை DSC செக்சனில் பைப் வெல்டிங் பணி நடந்து கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில், அங்கு பணியாற்றி வந்த ஹிமாஞ்சு, மனோஜ்குமார் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.



காயமடைந்த இருவரும் வெடி மருந்து தொழிற்சாலை மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சம்பவம் குறித்து வெலிங்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...