கோவையில் அமைதி நிலவ நடவடிக்கை தேவை - மாநகர காவல் ஆணையாளரிடம் எஸ்டிபிஐ கட்சி மனு

மக்கள் ஆதரவு பெற முடியாதவர்கள் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு மூலம் தமிழகத்தில் நுழைய நினைப்பதாக கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் மனு அளித்த எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை: எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் அக்கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையாளரை சந்தித்து மனு அளித்தனர்.



பின்னர் செய்தியாளர்களிடம் முபாரக் கூறியதாவது, கோவையில் அமைதி நிலவ தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதி இல்லை என்று கூறிய அவர், அண்மையில் கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் துரதிஷ்டவசமானது என தெரிவித்தார்.

சமூக நல்லிணக்கத்திற்கு மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு அச்சுறுத்தல் என தெரிவித்த நெல்லை முபாரக், இந்த விவகாரத்தில் மதம்,மொழியை பார்க்காமல் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு தமிழகத்தில் அவசியமில்லை என கூறிய அவர், மக்கள் ஆதரவு பெற முடியாதவர்கள் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு மூலம் தமிழகத்தில் நுழைய நினைப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

விளம்பர மேனியா நோயால் அண்ணாமலை பாதிக்கப்பட்டுள்ளதாக விமர்சித்த முபாரக், தமிழக ஆளுநர் ஒரு இணை அரசாங்கத்தை நடத்த நினைப்பதாக குற்றம்சாட்டினார்.

தமிழ்நாட்டுக்கு ஆளுநர் நல்லது செய்ய வேண்டும் என்றால் அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

என்ஐஏ என்ற பெயரில் சிறுபான்மையினரை குற்றப்பரம்பரையாக்க பார்ப்பதாகவும் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...