கோவையில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் சமீரன்

கோவையில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு உலக விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சமீரன், கொடியசைத்து துவங்கி வைத்தார்.


கோவை: ஆண்டுதோறும் நவம்பர் 25ஆம் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் பல இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.



இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் மீதான வன்முறைகள் மற்றும் பாகுபாடுகளை ஒழிக்கும் விதமாக சமூக நலத்துறை மற்றும் தனியார் கல்லூரி மாணவிகள் இணைந்து பேரணியில் ஈடுபட்டனர்.

இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இதில் 100 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணியில் கலந்து கொண்டனர்.



அந்த பதாகைகளில் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வசனங்களும், பெண்கள் மற்றும் குழந்தை நிகழும் குற்ற செயல்களுக்குப் அழைக்க வேண்டிய தொலைபேசி எண்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த பேரணி அரசு மருத்துவமனை பகுதியில் நிறைவடைந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...