அவிநாசி-அத்திகடவு திட்டத்தை முடக்க சிட்கோ தொழில்பேட்டையை அமைக்கும் திமுக அரசு - எஸ்.பி வேலுமணி குற்றச்சாட்டு

தொழிற்பேட்டை அமைக்க அன்னூர் பகுதியில் விளை நிலங்களை கையகப்படுத்தும் அரசின் முடிவை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்த எஸ்.பி வேலுமணி, இது குறித்து சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிமுக சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என கூறினார்.


கோவை: அன்னூர் பகுதியில் 3 ஆயிரத்து 731 ஏக்கரில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. அதற்கான அரசானையை தமிழக அரசு கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது.

இந்நிலையில் விளை நிலங்களை கையகப்படுத்தும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக அன்னூர் பேருந்து நிலையம் அருகே சுமார் 3 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனிடையே அதிமுக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி வேலுமணி தலைமையில் கோவையை சேர்ந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வராஜ், பி.ஆர்.ஜி அருண்குமார்,அமுல் கந்தசாமி, தனபால் ஆகியோர் விவசாயிகளை சந்தித்து அதிமுகவின் ஆதரவை தெரிவித்தனர்.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் எஸ்.பி வேலுமணி பேசியதாவது:



விவசாயிகளின் 60 ஆண்டுகள் கனவு திட்டமான அவிநாசி-அத்திகடவு திட்டப்பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த திட்டத்தை முடக்க வேண்டும் என்பதற்காகவே சிட்கோ தொழில்பேட்டையை திட்டமிட்டே தமிழக அரசு கொண்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்க அதிமுக ஒரு போதும் அனுமதிக்காது என கூறிய அவர் அதற்காக விவசாயிகளுக்கு அதிமுக தோல்கொடுத்து போராடும் என்றும் உறுதிபட தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிமுக சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும் எஸ்.பி வேலுமணி கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...