கோவையில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை - ஒருவர் கைது

கோவையில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்த ஒருவரை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் குருசந்திர வடிவேல், சந்தேகத்தின் பேரில் அங்கு நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளார்.

அப்போது அவர் அதே பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் என்பதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை பாலக்காட்டில் இருந்து வாங்கிவந்து திருட்டுத் தனமாக விற்று வந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்த போலீசார் கேரள லாட்டரி டிக்கெட்டுகள், பில் புக், 200 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதனைதொடர்ந்து அந்த நபரை சிறையில் அடைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...