தடையை மீறி கழிவுநீர் தொட்டிகளை சுத்தம்‌ செய்ய மனிதர்களை பயன்படுத்தினால் நடவடிக்கை - கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ எச்சரிக்கை

கோவையில் தடையை மீறி கழிவுநீர் தொட்டிகளை சுத்தம்‌ செய்யும் பணிகளில் மனிதர்களை பயன்படுத்தினால் அபராதம்‌ விதிக்கப்படுவதுடன் சிறைதண்டனை அனுபவிக்க நேரிடும் என்று மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில்‌ மனிதக்‌ கழிவுகளை மனிதனே அகற்றும்‌ தடைச்சட்டம்‌ 2013-ன்‌ படி, பாதாள சாக்கடைகள்‌ மற்றும்‌ கழிவுநீர் தொட்டிகளை சுத்தம்‌ செய்ய மனிதர்களை ஈடுபடுத்திட முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை மேற்கொள்ள கோவை மாநகராட்சி சார்பில்‌ போதுமான கழிவுநீர் உறிஞ்சி வாகனங்கள்‌ மற்றும்‌ இயந்திரங்கள்‌ பயன்பாட்டில்‌ உள்ளன.

எனவே மாநகராட்சி பகுதிகளில்‌ அமைந்துள்ள மத்திய,மாநில அரசு நிறுவனங்கள்‌, பொதுத்துறை நிறுவனங்கள்‌, தனியார்‌ நிறுவனங்கள்‌, வர்த்தக நிறுவனங்கள்‌, மால்கள்‌, இதர நிறுவனங்கள்‌, பள்ளிகள்‌, கல்லூரிகள்‌, கடைகள்‌, அடுக்குமாடி குடியிருப்புகள்‌ மற்றும்‌ குடியிருப்பு பகுதிகளில்‌ அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் தொட்டிகளை சுத்தம்‌ செய்யும்‌ பணிகளில்‌ மனிதர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுத்தக்‌ கூடாது என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இத்தடை சட்டத்தை மீறி எவரேனும்‌ செயல்படும்‌ பட்சத்தில்‌ உரிய சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன்‌ அபராதம்‌ மற்றும்‌ சிறைதண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்‌, இச்செயலால்‌ ஏதேனும்‌ உயிரிழப்புகள்‌ ஏற்படும்‌ பட்சத்தில்‌ உச்சந்திமன்ற உத்தரவின்படி பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபர்களின்‌ குடும்பத்தினருக்கும்‌ தலா 15 லட்சம் ரூபாய்க்கு குறையாமல்‌ இழப்பீடு வழங்குவது சம்மந்தப்பட்டவரையே சாரும்‌ என்றும் மாரகராட்சி ஆணையாளர் பிரதாப் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...