பள்ளி, கல்லூரிகளில் ஆவின் மையம் அமைப்பது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பாக பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகளில் ஆவின் மையம் அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆவின் ஒன்றியத் தலைவர் ப.வெ.தாமோதரன் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் த.கிருஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் கூறுகையில், ஆவின் நிறுவனம் இலாபம் நோக்கமில்லாமல் இயங்கும் ஒரு கூட்டுறவு நிறுவனம் ஆகும். நேரடியாக விவசாயிகளிடமிருந்து பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெறப்பட்ட பால் மாவட்ட பண்ணைகளுக்கு நேரடியாக அனுப்பபடுகிறது.

ஆவின் நிறுவனம் பொதுமக்களின் நலனிலும் உடல் ஆரோக்கியத்தையும் மையாமாக்க கொண்டு 3 சதவிகிதம் குறைந்த அளவு கொழுப்புச்சத்து கொண்ட சமன்படுத்திய பால், 4.5 சதவிகிதம் கொழுப்புச் சத்துள்ள நிலைப்படுத்திய பால், 6 சதவிகிதம்  கொழுப்புச் சத்துள்ள நிறை கொழுப்புப்பால் என மூன்று வகையான பால் நுகர்வோர்களுக்கு அரசு நிர்ணயித்த விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது விற்பனையை அதிகபடுத்தும் நோக்கில் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகளில் ஆவின் மூலம் தரமாகவும் நுகர்வோர் பயன்பெரும் வகையில் கடைகள் அமைக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அனைவரும் ஆரோக்கியமாகவும் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழ வேண்டும் என்ற நோக்கில் ஆவின் மூலம் கடைகள் அமைக்கப்பட்டு நுகர்வோர்களுக்கு பால், நெய், வெண்ணெய், ஐஸ்கிரிம், பன்னீர் போன்ற பொருட்கள் விற்பணை செய்யும் பொருட்டு நடவடிக்ககைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் ஆவின் பொது மேலாளர் சுமதி, துணை பொது மேலாளர் (விற்பனை) ரமேஸ்குமார், உதவி பொது மேலாளர் சக்கரவர்த்தி (தரக்கட்டுப்பாடு), ராஜேஸ் (பண்ணை) மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...