சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா தலைமையில் கோவையில் பல்வேறு இடங்களில் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் சமீரன் முன்னிலையில் உக்கடம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், பச்சாபாளையம் சிறுவாணி சாலையில் உள்ள ஆவின் நிறுவனம், புதிய துணை மின்நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.



கோவை: தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா தலைமையில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்சமீரன் முன்னிலையில் இக்குழுவின் உறுப்பினர்கள் ஹோப் காலேஜ் தொழில்நுட்ப பூங்கா, சவரிபாளையம்பிரிவு அத்வைத் நூற்பாலை, உக்கடம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், பொள்ளாச்சி சாலை சிட்கோ, தமிழ்நாடு பஞ்சாலை கழகம், கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி, காற்றாலை நிலையத்தில் ஆய்வு செய்தனர்.



மேலும் பச்சாபாளையம் சிறுவாணி சாலையில் உள்ள ஆவின் நிறுவனம், புதிய துணை மின்நிலையம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.



மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சுங்கம் பணிமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



தொடர்ந்து அக்குழுவினர் பணிமனையில் பேருந்துகள் தூய்மை செய்யப்படுவதை பார்வையிட்டனர். சுகாதாரமாக பொதுமக்களின் பயன்பாட்டுக்கு செல்கிறதா என்பதை ஆய்வு செய்தனர்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் ராஜா பேசியதாவது: இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு பெண்களுக்கு இலவச பேருந்துகளை அரசு இயக்கி வருவதாக கூறினார்.

அரசின் நோக்கம் அரசு பேருந்துகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்பது தான் என கூறிய அவர், பெண்களுக்கான இலவச பேருந்துகள் திட்டத்தில் அரசு பெயரை கெடுக்க சிலர் முயற்சி செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...