கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் - மேயரிடம் கோரிக்கை மனுக்களை அளித்த பொதுமக்கள்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ நடைபெற்ற மக்கள்‌ குறைதீர்க்கும்‌ கூட்டத்தில்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமாரிடம்‌ 40-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பொதுமக்கள்‌ அளித்தனர்‌.



கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்தில்‌ மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார் தலைமையில்‌ நடைபெற்றது.



இக்கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப் தலைமை வகித்தார்‌. துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ஷர்மிளா ஆகியோர்‌ கூட்டத்தில் கலந்து கொன்டனர்.



இக்கூட்டத்தி மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் பொதுமக்கள்‌ கோரிக்கை மனுக்களை அளித்தனர்‌. இதில்‌ இறப்பு சான்றிதழ்கள்‌, சாலை வசதி, மின்விளக்குகள்‌, குடிநீர்‌ வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர்‌ மாற்றம்‌, மருத்துவம்‌, சுகாதாரம்‌, கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்‌ குறித்த பல்வேறு கோரிக்கைகள்‌ அடங்கிய மனுக்கள்‌ பெறப்பட்டன.

இவற்றில்‌ கிழக்கு மண்டலத்தில்‌ 5 மனுக்களும்‌, மேற்கு மண்டலத்தில்‌ 6 மனுக்களும்‌, வடக்கு மண்டலத்தில்‌ 5 மனுக்களும்‌, தெற்கு மண்டலத்தில்‌ 3 மனுக்களும்‌, மத்திய மண்டலத்தில்‌ 15 மனுக்களும்‌, பிரதான அலுவலகத்தில்‌ 7 மனுக்கள் என மொத்தம்‌ 41 மனுக்களை பொதுமக்கள்‌ அளித்தனர்‌.

கோரிக்கை மனுக்களைப்‌ பெற்றுக்கொண்ட மேயர்‌ கல்பனா ஆனந்தகுமா,மனுக்களின்‌ மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில்‌,மண்டல உதவி ஆணையர்க,உதவி செயற்பொறியாளர்கள்‌,உதவி நகரமைப்பு அலுவலா்கள்‌,உதவி பொறியாளர்கள்‌,மாநகராட்சி அனைத்து அலுவலா்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...