திறந்தவெளி மலம் கழித்தலற்ற மாநகராட்சி என்ற சான்றுக்கு விண்ணப்பிக்கவுள்ள கோவை மாநகராட்சி - மக்கள் கருத்துகளை தெரிவிக்க அழைப்பு..!

திறந்தவெளி மலம், சிறுநீர் கழித்தலற்ற மாநகராட்சி என்ற சான்றுக்கு கோவை மாநகராட்சி விண்ணப்பிக்க உள்ளதால், பொதுமக்கள் இதுகுறித்த கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை 15 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிக்கை.



கோவை: கோவை மாநகராட்சி திறந்த வெளியில்‌ மலம்‌ கழித்தலற்ற மாநகராட்சி என சான்று பெறுவதற்கு விண்ணப்பிக்கப்பட உள்ளதால் மக்கள் தங்கள் ஆட்சேபனைகளை 15 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, மத்திய நகர்ப்புற மற்றும்‌ வீட்டுவசதி அமைச்சகத்தின்‌ மூலம்‌ தூய்மை பாரத திட்டம்‌ 2.0-ன் கீழ்‌ கோவை மாநகராட்சியில்‌ உள்ள 100 வார்டுகளில்‌ திறந்த வெளியில்‌ மலம்‌ மற்றும்‌ சிறுநீர்‌ கழித்தல்‌ அற்ற மாநகராட்சி சான்று பெறுவதற்கான நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனைதொடர்ந்து கோவை மாநகராட்சியினை திறந்த வெளியில்‌ மலம்‌ கழித்தல்‌ அற்ற மாநகராட்சி என சான்று பெறுவதற்கு விண்ணப்பிக்கப்பட உள்ளது.

பொதுமக்கள்‌ இது குறித்த தங்களின்‌ ஆட்சேபனைகள்‌, கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால்‌ 15 நாட்களுக்குள்‌ கோவை மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ ஆலோசனைகள்‌ மற்றும்‌ ஆட்சேபனையை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...